”நாடாளுமன்றக் கலைப்பிற்குக் காரணம் உள்ளாட்சித் தேர்தல் தோல்வியா?” - செந்தில் ஆறுமுகம்
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினா, “உள்ள ஆட்சிக்கும்” ஆபத்து வந்திரும்னு நினைக்கிறது அதிமுக..!! அது ஒருவகையில் உண்மை என்று நிரூபித்துள்ளது இலங்கை நாடாளுமன்ற கலைப்பு.. எப்படி ?
இலங்கை நாடாளுமன்றக் கலைப்பிற்குப் பலகாரணங்கள் இருந்தாலும், கடந்த பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிர்பர் சிறிசேனாவின் கட்சியும் பிரதமர் விக்கிரமசிங்கேவின் கட்சியும் ராஜபக்சேவின் கட்சியிடம் படுதோல்வி அடைந்ததும் ஒரு முக்கியக் காரணம் என்றே கருதுகிறேன்.!!
பிப்ரவரியில் நடந்த இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபட்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா(SLPP) கட்சி 340க்கு 225 இடங்களை வென்று அசுரவெற்றி பெற்றது. அதாவது ஆட்சிப்பொறுப்பில் உள்ள சிறிசேனா,விக்கிரமசிங்கேவின் கட்சிகளை எதிர்த்து நின்று !!
உள்ளாட்சித் தேர்தலில் ராஜபட்சே வென்ற 11-02-2018 அன்றே, “... மக்களின் குரலின்படி ஆட்சி மாற்றம் அவசியமாகிறது” என்று பிப்ரவரி 11 அன்று டுவீட் செய்தார். 9 மாதங்களில் அது நடந்துவிட்டது. !!( Thank you to all who supported the vision of the #SriLanka Podujana Peramuna at the #LGPolls2018. Your voices have been heard. It’s clear that our country needs a change.,Rajapaksa).
ஜெயிக்கும் குதிரையில்தானே அனைவரும் பணம் கட்டுவார்கள். 2015ன் பழைய பகையை மறப்போம், வென்ற குதிரையான உங்களையே பிரதமராக்குகிறேன், என்று முடிவெடுத்தார் சிறிசேனா.
பலசாலியான எதிரி என்றால் ஒன்று அவனை எதிர்த்து நின்று வெல்லவேண்டும், இது முதல் வகை; இல்லை பலசாலியான அவனை நம் பக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது இரண்டாம் வகை.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் சிறிசேனா, ராஜபக்சேவை எதிர்த்து நின்று வென்றது, முதல்வகையிலானது.
இப்போது, 2018ல் சிறிசேனா, ராஜபக்சேவை தம்பக்கத்தில் சேர்க்க பிரதமராக்கியது, நாடாளுமன்றத்தைக் கலைத்தது இரண்டாம் வகையிலானது..!!
ஜெயிக்கணும்..ஜெயிக்கணும்...ஜெயிக்கணும்...
அதுக்கு என்ன வேணாலும் செய்..!!
எதை வேண்டுமானாலும் செய்..!!
எப்படி வேண்டுமானாலும் செய்..!!
என்ற இன்றைய அரசியல் அடிப்படைப் பாடத்தை “சிறப்பாகப்” படித்தவராக இருக்கிறார் “சிறிசேனா”. பாதிக்கப்படுவதோ “ஸ்ரீலங்கா”. !!
எதை வேண்டுமானாலும் செய்..!!
எப்படி வேண்டுமானாலும் செய்..!!
என்ற இன்றைய அரசியல் அடிப்படைப் பாடத்தை “சிறப்பாகப்” படித்தவராக இருக்கிறார் “சிறிசேனா”. பாதிக்கப்படுவதோ “ஸ்ரீலங்கா”. !!
அருமையான பதிவு! ஆள்பர்களின் நோக்கம் என்பது ஒன்றே! அது எந்த நாடென்றாலும்!
ReplyDeleteஅருமையான பதிவு! ஆள்பர்களின் நோக்கம் என்பது ஒன்றே! அது எந்த நாடென்றாலும்!
ReplyDelete