நீதித்துறையில், அரசு நிர்வாகத்தில், சட்டமன்ற-நாடாளுமன்றத்தில் உள்ள பெண்களின் சதவிகிதம் என்ன..? அலசுகிறது இக்கட்டுரை...
-செந்தில் ஆறுமுகம், நவம்பர் 2018
புதிய தலைமுறை வார இதழில்..

என்ன ஆனது பெண்களுக்கு 33% ஒதுக்கீடு சட்டம்.. ?
-செந்தில் ஆறுமுகம்
கருத்து பகிர: sentharu@gmail.com, 87545-80274
-செந்தில் ஆறுமுகம், நவம்பர் 2018
புதிய தலைமுறை வார இதழில்..

என்ன ஆனது பெண்களுக்கு 33% ஒதுக்கீடு சட்டம்.. ?
-செந்தில் ஆறுமுகம்
+2 தேர்வுகள் தேதி அறிவிப்பு, தேர்வு முடிவுகள் அறிவிப்பு
குறித்தான செய்திகள் வெளியாகும்போது அதைச் சில நிமிடங்கள் நிறுத்தி நிதானமாக சிலதடவை
வாசிப்பேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும், மனதுக்குள் ஒரு இனம்புரியா மகிழ்வு நிகழும்.
அந்த சமயத்தில், பழைய பழமொழி ஒன்றும், பாரதியின் பாடல் ஒன்றும் நினைவுக்கு வரும். ”அடுப்பூதும்
பெண்ணுக்குப் படிப்பெதற்கு” என்பதே அந்தப் பிற்போக்குப் பழமொழி. மனதிற்குள் ஒலிக்கும்
பாரதியின் பாடல் இதுதான்:
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்..?
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்..?
தேர்வு குறித்த செய்திக்கும், பாரதியின் பாடலுக்கும் என்ன
சம்பந்தம்…? இருக்கிறது !!
தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் எத்தனை பேர், மாணவிகள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரத்தில்தான் என் மகிழ்ச்சியின் மையப்புள்ளி இருக்கிறது.
தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் எத்தனை பேர், மாணவிகள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரத்தில்தான் என் மகிழ்ச்சியின் மையப்புள்ளி இருக்கிறது.
2018ல் மார்ச் 1ம்தேதி துவங்க இருந்த +2 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டபோது,
இப்படி செய்தி வெளியாகி இருந்தது:
“… +2 தேர்வெழுதப்போகும் மாணவர்களின் எண்ணிக்கை:
4,00,179 ; மாணவிகளின் எண்ணிக்கை: 4,60,225.
மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கையே
அதிகம்(சுமார் 60ஆயிரம் பேர் அதிகம்)”
அந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மே 16ம்நாள் வெளியாகியிருந்தது.
அப்போது, வெளியான செய்தி இது:
“… +2 தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்களின் சதவிகிதம்:
87.7% ; மாணவிகளின் சதவிகிதம்: 94.1%. மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம்
6.4% அதிகம்”.
இது, கடந்த ஓராண்டு மட்டும் நடந்த அரிய நிகழ்வல்ல. கடந்த
பல ஆண்டுகளாகத் தொடரும் அற்புதம் !!
”…அடுப்பூதும் உங்களுக்குப் படிப்பெதுக்கு? நீங்கள் பாத்திரங்களைத் தேய்த்தால் போதும்; புத்தகங்கள் படிப்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்றிருந்த, பாரதி பாடிய “விந்தை மனிதரின்” ஆணாதிக்கச் சிந்தனையின் அடக்குமுறையை உடைத்தெறிந்து, நாங்கள் படிப்போம்; உங்களை விட அதிகம் படிப்போம்; உங்களை விட கூடுதலாக மதிப்பெண் எடுப்போம் என்று பெண்பிள்ளைகள் சாதித்துக் காட்டும் செய்தியை ஒவ்வொரு ஆண்டும் படிக்கும்போதும், பார்த்துப் பார்த்து மகிழ்வேன். சமூக மேம்பாட்டின் மேல் அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும், முற்போக்கு சிந்தனையுள்ள ஒவ்வொருவருக்கும் இது மகிழ்வான செய்தியாகத்தானே இருக்கமுடியும். இதில் மாற்றுக்கருத்துண்டோ..? நிற்க !!

தேர்வுகளிலிருந்து… தேர்தல்கள் நோக்கி…
சரி. பெண்களின்
பள்ளிப்படிப்பு குறித்த பெருமிதத்திலேயே மூழ்கிவிடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்.
பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பெண் பிள்ளைகள் சமுதாயத்தின் போக்கைத் தீர்மானிக்கும்
முக்கிய அங்கங்களில் எந்த அளவு பங்கு வகிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
மீண்டும் பாரதி.!!
பெண்கள் குறித்து அவர் பாடிய கும்மிப் பாடலின் அடுத்த வரிகள்
இப்படிப் போகிறது…
”…பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
பள்ளி செல்ல வாய்ப்பு மறுக்கப்பட்ட காலத்திலேயே, பெண்கள்
படித்தால் மட்டும்போதாது ”சட்டங்களை உருவாக்கும்” உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று
கனவு கண்டான் பாரதி. தன் கனவை இந்த வரிகளுக்குள் இறக்கிவைத்துவிட்டு இறந்து போனான்.
அந்த மீசைக் கவிஞனின் ஆசை நிறைவேறியதா.. ? பொத்தம் பொதுவாகப் பார்க்காமல், புள்ளிவிவரத்தோடே
பார்த்துவிடுவோம்.
சட்டத்தை உருவாக்கும் சட்டமன்றம்/நாடாளுமன்றம் , சட்டத்தை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள், சட்டம்
தொடர்பான சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் நீதிமன்றம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று முக்கிய
அங்கங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் எந்த அளவு இருக்கிறது என்பதைப் பார்த்தால்
பாரதி பாடிய “சட்டங்களை உருவாக்கும்” நிலைக்கு பெண்கள் வந்தடைந்திருக்கிறார்களா என்பது
தெரியும்.
நாட்டின் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி(48%) பெண்கள். ஆனால், நாட்டை வழிநடத்தும் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களாக
உள்ள பெண்களின் சதவிகிதம் எவ்வளவு..?
வெறும் 12%. மட்டுமே. ( லோக்சபாவில் உள்ள 543 எம்.பிக்களில் 62 பேர் மட்டுமே பெண்கள்; , ராஜ்யசபாவில் உள்ள 244 எம்.பிக்களில் பெண்களின் எண்ணிக்கை: 28). நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் இதேபோன்ற நிலைதான் இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் படிப்பறிவு மிக்க மாநிலம் என்று சொல்லப்படும் கேரள சட்டசபையில் உள்ள பெண் எம்.எல்.ஏ.க்கள் 6% மட்டுமே. முன்னேறிய மாநிலமான தமிழகத்தில் உள்ள பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் 9% !!(2016 தேர்தலின்படி); பின்தங்கிய மாநிலம் எனக் கருதப்படும் பீகாரில் கூட இது 12% ஆக உள்ளது !!. ஆக, சட்டம் இயற்றும் இடத்தில், அது சட்டமன்றமாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக்குறைவு என்பது தெளிவாகத்தெரிகிறது.
சட்டத்தை செயல்படுத்தும் இந்திய ஆட்சிப்பணித்துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 1974ம் ஆண்டில் தொடங்கி, அடுத்த 40 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக தேர்ச்சிபெற்ற 4448பேரில் 687பேர் மட்டுமே பெண்கள் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. அதாவது, 15% மட்டுமே பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். வேறு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால், 100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியில் சேர்ந்தால் அதில் 85% ஆண்களே !!

சட்டச் சிக்கல்களைத் தீர்த்துவைத்து, நாட்டிற்கு நீதி வழங்கும்
நீதிமன்றங்களிலும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. உச்சநீதிமன்றத்தின் கடந்த
68ஆண்டுகால வரலாற்றில் மொத்தம் 8பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1989ல் முதல் பெண் நீதிபதியாக பாத்திமா பீவி அவர்கள் நியமிக்கப்பட்டார். 1950ல் துவங்கப்பட்ட
உச்சநீதிமன்றம் தனது முதல் 39 ஆண்டுகளில் ஒரு பெண்ணைக்கூட நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை
என்ற செய்தி அப்போதுதான் பெருவாரியான மக்களின்
கவனத்திற்கு வந்தது !! தற்போதைய நிலை என்ன ? தற்போது, உச்சநீதிமன்றத்தில் உள்ள 28 நீதிபதிகளில்
பானுமதி,இந்துமல்ஹோத்ரா,இந்திரா பானர்ஜி என மூன்று பேர் மட்டுமே பெண் நீதிபதிகள். அதாவது,
11% மட்டுமே. ஒரே சமயத்தில் மூன்று பெண் நீதிபதிகள் இருப்பது இதுவே முதல் முறை !! உச்சநீதிமன்ற
வரலாற்றில் இதுவரை, ஒரு பெண் நீதிபட கூட தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்ததில்லை!!.
ஆக, நீதிமன்றங்களிலும் பெண்களுக்கு நீதியில்லை. !!
நீதித்துறையில் 11% ; நாடாளுமன்றத்தில் 12% ; ஆட்சிப்பணித்துறையில் 15% ; என்ற அளவில்தான் ஜனநாயகத்தின் மூன்று முக்கிய அங்கங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. இது கவனத்துக்குரியது மட்டுமல்ல கவலைக்குரியதும் கூட !! இதற்கான காரணங்கள் பல. அரசியல்வாதி, ஐ.ஏ.எஸ், நீதிபதி என ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு குறைவதற்கு தனித்தனி காரணங்கள் உண்டு. தீர்வுகள் உண்டு. அனைத்தையும் இங்கு ஆராய்வது சாத்தியமில்லை. ஆகவே சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் தர வாய்ப்பளிக்கும் சட்டமானது, முன்னர் விவாதிக்கப்பட்டதே(108வது அரசியல் சாசனத் திருத்தம்) அது இப்போது என்ன ஆனது என்பதை மட்டும் திரும்பிப் பார்ப்போம்,

புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கான மசோதாக்கள் பல நமது
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். அரசியல் காரணங்களுக்காக அது அப்படியே கிடப்பில்
போடப்படும். அப்படி, கிடப்பில் போடப்பட்டதொரு மசோதாதான், மகளிர் இடஒதுக்கீடு மசோதா.
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் உள்ள இடங்களில் 33% ஒதுக்கீட்டை பெண்களுக்கு அளிக்க வழிவகுக்கும்
இம்மசோதா 1996லிருந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு ராஜ்யசபாவில்கூட
நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், இரு அவைகளிலும் நிறைவேற்றப்படாததால் இச்சட்டம் இன்னும்
நடைமுறைக்கு வரவில்லை. 33% சதவீத ஒதுக்கீட்டுக்குள் ”பிற பிற்பட்ட சமுதாயத்தினருக்கு”
உள் ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்ற சர்ச்சையின் காரணமாக(முலாயம் சிங் யாதவ், லல்லுபிரசாத்
போன்றோர்) இச்சட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்த உள் ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம்
கிடைக்காது என்பது இவர்கள் முன்வைக்கும் வாதம்.
1992ல் நிறைவேற்றப்பட்ட பஞ்சாயத்து
ராஜ் சட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
இதை, எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சிகள் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில்
33% ஒதுக்கீடு தர எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. (தமிழக அரசு ஒருபடி மேலேபோய்
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இருந்த 33% ஒதுக்கீட்டை 50% என உயர்த்தியது, மிகவும்
பாராட்டுதலுக்குரியது(2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்தது)
இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் நோக்கி ஒரு
கேள்வி எழுப்புவது அவசியமாகிறது. பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வருகிறதோ
இல்லையோ, தேர்தலின்போது அக்கட்சிகள் தானே முன்வந்து 33% அல்லது 50% தொகுதிகளில் பெண்களை
வேட்பாளர்களாக அறிவிப்பதற்கு என்ன தடை இருக்கிறது? யார் அவர்களைத் தடுக்கிறார்கள்?
எது அவர்களைத் தடுக்கிறது..? ஆக, அரசியல் கட்சிகள் மனம் வைத்தால், சட்டம் செயல்பாட்டுக்கு
வராமலேயே மேலும் மிக அதிகமான பெண்களை சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ நுழையச் செய்யமுடியும்.
இதை ஒருகட்சி செய்யமுற்பட்டால், அது ஊடகங்களில் செய்தியாகுமானால், அரசியல் நிர்பந்தம்
காரணமாக பிற கட்சிகளும் இதைச் செய்யமுற்படும். பெண்களின் வாக்குகளைக் கவர சிறப்புத்
திட்டங்கள் அறிவிக்கும் கட்சிகள், பெண்களுக்கு சட்டமன்றம்-நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம்
பெற்றுத்தரும் இம்முயற்சியை ஏன் முன்னெடுப்பதில்லை…?
மகளிர் இடஒதுக்கீடு என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கான
ஒட்டுமொத்தத் தீர்வல்ல என்பதைப் புரிந்துகொள்வோம். அதே சமயத்தில், சமூக மாற்றத்திற்கான
கொள்கை முடிவெடுப்பதில் அவர்களின் பங்கேற்கை அதிகரிக்கும் ஒரு படிக்கல் இது “என்பதையும்”
புரிந்துகொள்வோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களைப் பொம்மைகளாக வைத்துக்கொண்டு ஆண்கள்
பின்னிருந்து ஆட்சி செலுத்துவார்கள் என்பது இவ்விவகாரத்தில் தொடர்ந்து முன்வைக்கப்படும்
வாதம். உள்ளாட்சி அமைப்புகளில் கொடுக்கப்பட்ட பெண்கள் ஒதுக்கீடு இப்படிப் பயன்படுத்தப்படுவதை
ஆங்காங்கே பார்க்கிறோம். அதே சமயத்தில், ஒதுக்கீடு கொடுத்ததால், கூடுதல் வாய்ப்பு பெற்று
சாதித்த ஏராளமான பெண் பஞ்சாயத்துத் தலைவர்களையும் தமிழகம் கண்டுள்ளது என்பதையும் மறந்துவிடக்கூடாது.
முதலில் பெண்களுக்கு உரிய வாய்ப்பைத் தர மறுப்பது, அவர்களின் உரிமையைத் தட்டிப்பறிக்கும்
செயல் என்று கருதி சட்டத்தைக் கொண்டுவருவோம். அதிலுள்ள செயல்பாட்டுச் சிக்கலைப் பின்னர்
பார்த்துக்கொள்வோம்.
அர்த்தநாரீஸ்வரர்
என்று, பெண்ணுக்கு இறைவனின் உடலிலேயே பாதி(50%) ஒதுக்கீடு கொடுத்த சமூகம், ஜனநாயகத்தின்
அடிநாதமான சட்டமன்றத்தில்-நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு தருவதற்கான முழுமுயற்சியில் இறங்கவில்லை
என்பது முரணாக இல்லையா.. ?
பெண்களுக்கு சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு
என்பது மத்திய அரசால்(நாடாளுமன்றத்தில்) கொண்டுவரப்படவேண்டிய ஒரு சட்டம். இன்னும் சில
மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரவிருக்கிறது. பிரதான தேசியக் கட்சிகளான காங்கிரஸ்,பா.ஜ.க.
ஆகிய இருகட்சிகளுமே, இதனை நிறைவேற்றுவோம் என்றே கடந்த தேர்தல்களின்போது உறுதியளித்துள்ளன.
2004லிருந்து 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆண்டது. 2014ல் துவங்கிய பா.ஜ.க.ஆட்சிக்காலம் முடியப்போகிறது.
ஆனாலும் இச்சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 22 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்தச்
சட்டம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலின்போதாவது முக்கியத்துவம் பெற்று, ஆட்சியமைக்கப்போகும்
கட்சியால் செயல்முறைக்குக் கொண்டுவரப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
!!
“… எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”
இளைப்பில்லை காணென்று கும்மியடி”
என்ற பாரதியின் புரிதல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எப்போது
வரும்…?

No comments:
Post a Comment