Monday, 28 January 2019

JACTTO GEO - FAQ - ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் விளக்கங்கள்/நிலைப்பாடுகளும்

                       ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளும்
  சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் விளக்கங்கள்/நிலைப்பாடுகளும் 

கோரிக்கை 1.  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்(CPS திட்டம்) ரத்து செய்யப்பட்டு பழைய பென்சன் திட்டம் கொண்டுவரப்படவேண்டும்.

1.1  CPS திட்டத்தின் நடைமுறைகள் தமிழக அரசால் தெளிவாக வரையறுக்கப்படவேண்டும். வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
1.2 CPS திட்டத்தில் இதுவரை சேர்ந்துள்ள நிதி எங்கிருக்கிறது, எப்படிக் கையாளப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை வெளியிடவேண்டும். இதை நாளிதழ் விளம்பரமாகவும் வெளியிட வேண்டும்

1.3 CPSல் சேர்ந்துள்ள நிதியை தமிழக அரசு உடனடியாக PFRDAவில் செலுத்தவேண்டும். இவ்வளவு ஆண்டுகள் செலுத்தப்படாமல் இருந்ததற்கு காரணங்களை விளக்கவேண்டும்.

1.4 CPS திட்டம் அமலான பிறகு(01.04.2003) பணிக்கு சேர்ந்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் கிடைக்காது என்ற விதிமுறையை ஏற்றுக்கொண்டே பணிக்கு சேர்கிறார்கள்

1.5  பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்ந்தால் மாநில அரசின் நிதிச்சுமை மோசமாகிவிடும் என்ற காரணத்தால் மத்திய அரசு, ஓரிரு மாநிலங்களைத் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்புவது என்பது நிதி-சாத்தியமற்றது(Financially not viable)