இந்த செக்கை இழுத்தபோது, இந்த சிறை அறையில் வாடியபோது ..வ.உ.சி
நூறாண்டுகளுக்கு முன்பு சொந்தமாக கப்பல் ஓட்டியவர், பிரபல வழக்கறிஞர்... விடுதலைப் போராட்டத்திற்கு, தமிழ் இலக்கியத்திற்கு மாபெரும் தொண்டாற்றிய வ.உ.சி, கடைசிக் காலத்தில் மளிகைக் கடை நடத்தியும், மண்ணென்ணெய் கடை நடத்தியும் வறுமையின் பிடியில் இருந்தபோது இறந்துபோனார். இன்று அவரின் வாரிசுகள் கல்லூரிக் கட்டணம் கட்ட வழியில்லாமல் போராடி பிறகு வங்கிக்கடன் வாங்குகிறார்கள்..
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு(1908-1912) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் இந்த செக்கை இழுத்தபோது, சிறையில் இந்த அறையில் வாடியபோது விடுதலையான இந்தியா, தமிழகம் எப்படியெல்லாம் இருக்கும் என்று எத்தனை கனவு கண்டிருப்பார் வ.உ.சி...??
(நவ 18, வ.உ.சி. நினைவு நாள்)
ஊழலும், சுயநலமும் தங்கள் இருகண்கள் என ஆளும் இன்றைய ஆட்சியாளர்களைக் கண்டால், இதற்கா இத்தனை பேர் ரத்தம் சிந்தினோம், வாழ்க்கை இழந்தோம், உயிர் இழந்தோம் என்ற கேள்வி அவர்கள் மனதை முள்ளாய்க் குத்திக் கிளரும்...
(நவ 18, வ.உ.சி. நினைவு நாள்)

No comments:
Post a Comment