23-01-2016:
நேற்றைய தந்தி டிவி நிகழ்ச்சியில்(மக்கள் யார் பக்கம்) இரண்டு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு அதுகுறித்து விவாதம் நடந்தது. நானும், எழுத்தாளர் ஆழி செந்தில்நாதனும்(பச்சைத் தமிழகம் கட்சி) கலந்துகொண்டோம்.
முதலில் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
1.தமிழக அரசியலுக்கு புதுமுகங்கள் அவசியமா?
90% - ஆம் ; 7% - இல்லை ; 3% கருத்துகூற விரும்பவில்லை
1.தமிழக அரசியலுக்கு புதுமுகங்கள் அவசியமா?
90% - ஆம் ; 7% - இல்லை ; 3% கருத்துகூற விரும்பவில்லை
2.தமிழக அரசியலில் சாமான்யர்களுக்கு இடமிருக்கிறதா?
77% - இல்லை ; 23% - ஆம்
77% - இல்லை ; 23% - ஆம்
எனக்குக் கிடைத்த வாய்ப்பின்போது முன்வைத்தவை:
- 1987க்கு பிறகு நடந்த 6 தேர்தல்களிலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாற்றத்தை அடைந்ததுதான் மிச்சம். 1989,1991,96,2001,2006,2011 ஆகிய ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆளுங்கட்சியாக இருந்த கட்சி தோல்வியுற்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. இந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பி வாக்களித்ததைவிட, ஆளுங்கட்சியாக உள்ள கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று “எதிர்மறையாக” வாக்களித்தவர்கள்தான் அதிகம்.
- எளியமக்களின் பார்வையில் அரசியல் என்பது “கோடிகள், கேடிகள்” சம்பந்தப்பட்டது என்ற நிலைக்குப் போய்விட்டது.
- புதிய அரசியல் கலாச்சாரத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்றளவும் சாதி அரசியல் என்பது புரையோடிப்போயுள்ளது.
“நிரந்தர பொதுச்செயலாளரைத்” தேர்ந்தெடுக்க!! பொதுக்குழு நடத்தும் போக்கு, குடும்ப அரசியல் போன்ற ஜனநாயகப் படுகொலைகளைப் பார்த்து மக்கள் வெறுத்துப்போயுள்ளனர்.
“நிரந்தர பொதுச்செயலாளரைத்” தேர்ந்தெடுக்க!! பொதுக்குழு நடத்தும் போக்கு, குடும்ப அரசியல் போன்ற ஜனநாயகப் படுகொலைகளைப் பார்த்து மக்கள் வெறுத்துப்போயுள்ளனர்.
- முகநூல், வாட்ஸ் அப்பில் விவாதித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சகாயம்.ஐ.ஏ.எஸ் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று வீதியில் இறங்கி பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது தமிழக மக்கள் # எங்கே_என்_தலைவன் என்று வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் வெளிப்படையாகக் காட்டுகிறது.
- அடுத்த தேர்தல் பற்றி சிந்திப்பவன் - அரசியல்வாதி;
அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பவன் -தலைவன்.
தமிழகத்தில் எக்கச்சக்க அரசியல்வாதிகள் உண்டு. தலைவனைத்தான் காணவில்லை.
அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பவன் -தலைவன்.
தமிழகத்தில் எக்கச்சக்க அரசியல்வாதிகள் உண்டு. தலைவனைத்தான் காணவில்லை.
கடந்த 6 தேர்தல்களில் மாத்தி-மாத்தி ஓட்டுப்போட்ட மக்களின் நிலையைப் பார்க்கும்போது இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..
தேர்தல் வருகிறது.
இந்த ஆடுகளுக்கு மகிழ்ச்சி.
எதற்காக..?
எந்த அரிவாளால் இவர்களை
வெட்டிக்கொள்ளலாம் என்று
அரிவாளைத் தேர்ந்தெடுக்க
இவர்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டதாம் !! ??
இந்த ஆடுகளுக்கு மகிழ்ச்சி.
எதற்காக..?
எந்த அரிவாளால் இவர்களை
வெட்டிக்கொள்ளலாம் என்று
அரிவாளைத் தேர்ந்தெடுக்க
இவர்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டதாம் !! ??
இனிமேலும் நாங்கள் அரிவாளைத் தேர்ந்தெடுக்கும் ஆடுகளாக இருக்கமாட்டோம் என்ற அடிப்படையில் ”அரசியலில் புதுமுகங்கள் வேண்டும்” என்று 90% மக்கள் வாக்களித்திருப்பது, புதிய அரசியல் கலாச்சாரம் விரைவில் மலரும் என்ற நம்பிக்கையளிப்பதாக உள்ளது... அந்த நம்பிக்கையோடு, பயணத்தைத் தொடர்வோம்..






