நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் !! மோடி என்ன செய்தார் ? ராகுல் என்ன செய்வார் ?
- செந்தில் ஆறுமுகம்
நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் !!
மோடி என்ன செய்தார் ? ராகுல் என்ன செய்வார் ? - செந்தில் ஆறுமுகம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான சாரலும் ஒருசேர வீசத் துவங்கிவிட்டது. தமிழகம்,புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் துவங்கியுள்ளது திமுக. ”…நாங்களும் நாடாளுமன்றதேர்தலுக்காக தமிழகமெங்கும் பூத் கமிட்டிகள் அமைத்து விட்டோம். வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகளில் தீவிரமாக இருக்கிறோம் ” என அதிமுகசெய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார்.
உலகின் மிக உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் படேல் திறப்புவிழாவின் மூலமும், அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்தவுள்ள தொடர் யாத்திரைகள் மூலமும் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதேபோல், வீடு-வீடாய்ச் சென்று பா.ஜ.க. ஆட்சியின் அவலங்களை, ஊழல்களை எடுத்துச்சொல்லியும் – இந்தியாவின் பன்முகத்தன்மை காக்கப்பட பா.ஜ.க ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று சொல்லி தங்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணித்திட்டத்தை காங்கிரஸ் முடுக்கிவிட்டுள்ளது.
கட்சிகளின் அறிவிப்புகளுக்கிடையே, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒன்றும் கவனத்துக்குரியது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு எந்திரத்தில் பொத்தானை அழுத்திய பிறகு “யாருக்கு வாக்களித்தோம்” என்பதைக் காட்டும் துண்டுச்சீட்டு ஒன்று வாக்களிப்பவரின் பார்வைக்கு சில விநாடிகள் காட்டப்படும் என்பதே அந்த அறிவிப்பு. VVPAT(Voter Verifiable Paper Audit Trail ) எனப்படும் இந்த முறையானது வாக்கு எந்திரத்தில் முறைகேடுகள் நடக்கிறது என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் ஒரு முக்கியத் தீர்வாகும்.
கட்சிகளின் அறிவிப்புகளுக்கிடையே, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒன்றும் கவனத்துக்குரியது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு எந்திரத்தில் பொத்தானை அழுத்திய பிறகு “யாருக்கு வாக்களித்தோம்” என்பதைக் காட்டும் துண்டுச்சீட்டு ஒன்று வாக்களிப்பவரின் பார்வைக்கு சில விநாடிகள் காட்டப்படும் என்பதே அந்த அறிவிப்பு. VVPAT(Voter Verifiable Paper Audit Trail ) எனப்படும் இந்த முறையானது வாக்கு எந்திரத்தில் முறைகேடுகள் நடக்கிறது என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் ஒரு முக்கியத் தீர்வாகும்.
கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகளைத் தாண்டி தமிழக அரசியல் நிலவரம் என்ன என்று பார்ப்போம். தமிழகத்தைப் பொறுத்தவரை நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்றத் தேர்தல் என்பது, இருபெரும் கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி அவர்களின் மறைவிற்குப் பின் நடைபெறும் முதல் தேர்தல். 2011, 2016 சட்டமன்றத் தேர்தலில் தொடர்வெற்றி மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 39க்கு 37தொகுதிகளில் வெற்றி என தேர்தல் களத்தில் ஏறுமுகத்தில் இருந்தது அதிமுக. ஆனால் இன்றைய நிலை ? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி, டிடிவி தினகரனால் ஏற்பட்ட கட்சிப்பிளவு , 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, சி.பி.ஐ. விசாரணையை எதிர்நோக்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ; இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை எதிர்நோக்கியுள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், குட்கா ஊழல்- நிலக்கரி ஊழல் என ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் அதிமுகவின் வாக்குவங்கி இறங்குமுகத்தை நோக்கியுள்ளது என்றே பேசப்படுகிறது.
எந்தக் காரணங்கள் அதிமுகவிற்கு இறங்குமுகத்தைக் கொடுத்ததோ அதே காரணிகள்தான் திமுக கூட்டணிக்குக் கூடுதல் தெம்பளிப்பதாக உள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டுகள்-விடு தலைச் சிறுத்தைகள்-மதிமுக என ஏற்கனவே வலுவாக உள்ள திமுக கூட்டணிக்கு, அதிமுக அரசின் மீதுள்ள அதிருப்தி கூடுதல் வலு சேர்ப்பதாக உள்ளது என்பதே கள நிலவரங்கள் சொல்லும் செய்தி. ஆனாலும், அதிமுக- டிடிவி தினகரன் என அதிமுக வாக்குகள் பிளவுபட்டிருந்த சூழலிலும் ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது.
பிரதான கட்சிகள், கூட்டணிகளின் நிலை இவ்வாறு உள்ள சூழலில் பா.ம.க,தே.மு.தி.க உள்ளிட்ட பிற கட்சிகள் தங்கள் தேர்தல் நிலைப்பாட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தேர்தல் நெருங்க, நெருங்க ஒவ்வொரு கட்சியாய் தன் நிலைப்பாட்டை அறிவிக்கும். அப்போது கூட்டணி கணக்குகள் இன்னும் தெளிவாகத் தெரியும். நிற்க !!
இந்தியாவை ஆளப்போகும் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யப்போகும் தேர்தல் இது. இப்படிச் சொல்லும்போதே இப்போதுள்ள பிரதமர் என்ன செய்தார் என்ற கேள்வி எழுவது இயற்கையே..!! என்ன செய்தார் மோடி ? இதற்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைத் திரும்பிப்பார்ப்பது அவசியமாகிறது.
”ஒரே பாரதம்; வலிமையான பாரதம்; அனைவரின் வளர்ச்சி” இந்த கோஷத்தை முதல்வரியாகக் கொண்டே பா.ஜ.க.வின் 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை துவங்குகிறது. நவீன தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு வசதிகொண்ட 100 புதிய நகரங்களை உருவாக்குவது; நாட்டின் 100 பின் தங்கிய மாவட்டங்களை முன்னேற்றம் அடையச் செய்வது; கிராமங்களில், நகரங்களுக்கு இணையான வசதிகளை அளிப்பது, தேசிய விவசாய சந்தையை உருவாக்குவது, ஊழலுக்கான வாய்ப்பை இல்லாமல் செய்யும் அமைப்பை உருவாக்குதல், விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50 சதவீத லாபத்தை உறுதி செய்வது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்பது என்பது உள்ளிட்ட ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தது பா.ஜ.க.
இதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை நிலை. 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் ஊழல் என காங்கிரஸ் அரசின் ஊழல்களை பிரச்சாரத்தின் போது பெருமளவு பயன்படுத்திக்கொண்டது பா.ஜ.க. ஆனால், ஆட்சிப்பொறுப்புக்கு வந்து 5 ஆண்டுகள் முடியும் நிலையிலும் ஊழல் ஒழிப்பு அமைப்பான “லோக்பால்” அமைப்பிற்கு தலைவரைக் கூட பா.ஜ.க நியமிக்கவில்லை என்பதிலிருந்தே ஊழல் ஒழிப்பின் மீது பா.ஜ.க.வின் “அக்கறை” தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்தி விலைக்கு மேல் 50 சதவீத இலாபம் என்ற முக்கிய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவோம் என்றார்கள். எங்கே அந்த 100 ஸ்மார்ட் சிட்டிகள்? 100 பின் தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுவோம் என்றார்கள். எங்கே அந்த 100 முன்னேறிய மாவட்டங்கள் ? பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகள் மூலம் கருப்புப்பணம் தொடர்ந்து உருவாவது தடுக்கப்பட்டுவிட்டது என்று சொல்லமுடியுமா? சுவிஸ் வங்கியில் இந்திய அரசியல்வாதிகள், பெரு முதலாளிகள் சேர்த்துவைத்துள்ள கருப்புப்பணத்தை முழுவதுமாக மீட்டு வந்துவிட்டோமா..?
கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை செயல்படுத்தவில்லை என்பது பா.ஜ.க ஆட்சி என்ற நாணயத்தின் ஒருபக்கம். கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து மாநிலங்களுக்கு உரிய அதிகாரம், அங்கீகாரங்களை வழங்காமல் எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்வது - இந்தியாவின் பன்முகத் தன்மையை மதிக்காமல் “ஒரே நாடு ;ஒரே கலாச்சாரம்” என்ற அணுகுமுறையில் செயல்படுவது என்பது நாணயத்தின் மறுபக்கம். இப்படிப்பட்ட பின்னணி இருந்தபோதிலும், பல மாநிலங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று இந்தியாவின் மிகப்பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி நடத்தும் கட்சி என்ற நிலையில் இருந்துகொண்டு பா.ஜ.க 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நிற்கிறது.
காங்கிரசின் இன்றைய நிலையென்ன..? கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.க.விடம் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றிருந்தாலும், தற்போது அவர்கள் கையில் எடுத்துள்ள “ரபேல் விமான ஊழல்” காரணமாக காங்கிரசின் பக்கம் ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் திரும்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி ரபேல் ஊழல் பற்றிப்பேசியது, பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரின் பேட்டி, பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர்களான ஜஷ்வந்த் சிங், அருண் ஷோரி போன்றவர்களின் அதிரடி பேட்டிகள் போன்றவை பா.ஜ.கவிற்கு எதிரான வலுவான வாதங்களாக உருவெடுத்துள்ளன. ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக பாடுபடும் கட்சியே பா.ஜ.க என்பது காங்கிரஸ் முன்வைக்கும் கடும் குற்றச்சாட்டு. கடந்த தேர்தலில் எப்படி காங்கிரசுக்கு எதிராக 2ஜி ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோ, அதேபோல் இந்தத் தேர்தலில் பா.ஜ.கவிற்கு எதிரான ஒற்றை ஆயுதமாக “ரபேல் விமான” ஊழலை பறக்கவிடப்போகிறார்கள் காங்கிரசார். ஆனால், காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்றுவரை இறுதியாகவில்லை என்பது காங்கிரஸ் தரப்பின் ஒரு குறிப்பிடத்தக்க பலவீனமாக இருந்துவருகிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பு இழப்பினால் பாதிக்கப்பட்ட கணிசமான தொழில்துறையினர் மோடியின் ஆட்சியை வீழ்த்த காங்கிரசுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வருவார்கள். இது காங்கிரசுக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுத்தரும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலைப்போல் 31% வாக்குகளை வாங்கி தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. வரமுடியுமா என்பது கேள்விக்குறியே. அதேசமயத்தில் பா.ஜ.கவின் கார்ப்பரேட் தேர்தல் யுக்தியை எதிர்கொண்டு அவர்களிடமிருந்து ஆட்சியைத் தட்டிப்பறிக்க காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கவேண்டும் என்பதோடு கடும் உழைப்பை களத்தில் போடவேண்டும் என்பது மட்டும் தெளிவு.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான்,மத்தியபிரதேஷ்,சத்தீ
5 மாநிலத் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளிவந்துவிடும். ஆக, 2019 புத்தாண்டு பிறக்கும்போது தேசியக் கட்சிகளும், மாநிலக்கட்சிகளும் அமைக்கும் புதிய கூட்டணிகளும் பிறந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் வகுக்கும் கொள்கைகள் கார்ப்பரேட்டுகள் பக்கம் மட்டும் கவனம் செலுத்தாமல் கலப்பை பிடிப்பவனையும், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தரக் குடும்பங்களையும் கவனத்தில் கொள்வதாக இருக்கவேண்டும் என்பதே மிகப்பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்பார்ப்பு. இதை பா.ஜ.க, காங்கிரஸ் கவனத்தில் கொள்ளுமா..?
- கருத்துக்கள் பகிர: 87545-80274, sentharu@gmail.com




No comments:
Post a Comment