#கடல்_நீரை_குடிநீராக்கும்_திட்டம் .. செந்தில் ஆறுமுகம்
27-06-2019
27-06-2019
1. வீட்ல கரண்ட் போனா, அவசரத்தேவைக்கு-கொஞ்ச நேரத்துக்கு UPS பயன்படுத்தலாம்..ஆனால், UPSஐ வைத்தே நாள் முழுதும் ஓட்டமுடியாதே Mr.EPS-OPS ??..!!
2. ஆண்டுக்கு சராசரியாக 911மி.மி மழைபெறும் தமிழகம்; தமிழக சராசரியைவிட கூடுதல் மழைபெறும் சென்னை; இப்படிப்பட்ட நிலையில் சென்னையின் நீர் தேவைக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிரந்தரமாக நம்பியிருப்பது நம்மிடம் முறையான நீர் மேலாண்மைத் திட்டம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது..
3. கடந்த ஆண்டு ஜீலை,ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகம் நமக்கு அனுப்பியிருக்க வேண்டிய காவிரி நீரின் அளவு 77 டி.எம்.சி.(ஜீலை-31, ஆகஸ்ட்-46) ; ஆனால், கர்நாடகாவில் கடும் மழைப்பொழிவு இருந்ததால், தமிழகத்திற்கு 301 டி.எம்.சி. நீரை அனுப்பியது(ஜீலை-125,ஆகஸ்ட்-176).. இதில் கணிசமான நீரை கடலில் விட்டது தமிழகம்..!! கடும் வறட்சியை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த ஆண்டும் இதேபோல் நடந்தால் ஆச்சர்யமில்லை. இதைக் காரணமாகப் பயன்படுத்தி, உங்களிடம் நீரைத் தேக்கத் திட்டமில்லை ஆகவே, மேகதாதுவில் அணைகட்டி நாங்கள் நீரை சேமித்து உங்களுக்குத் தருகிறோம் என்று வாதாடுகிறது கர்நாடகா.!!
4. முறையான மழைநீர் சேகரிப்பு, ஏரி-குளங்களை ஆழப்படுத்துதல்,அகலப்படுத்துதல்,ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மணல் திருட்டை கட்டுப்படுத்துதல்,புதிய நீர்தேக்கங்களை ஏற்படுத்துதல், நீர் சிக்கனம் குறித்த பெரும்விழிப்புணர்வு போன்ற நீண்டகால அடிப்படையில் நிரந்தரத் தீர்வைத் தரும் திட்டங்களை நோக்கி நகரவேண்டும் தமிழகம்.
RAIN Water is Permanent ;
RAIL Water is Temporary..!!
RAIL Water is Temporary..!!
-செந்தில் ஆறுமுகம்