Saturday, 9 January 2016

“கண்ணியமான தேர்தலும்-சமூகமும்”..Electoral Integrity



நேற்று நடைபெற்ற “கண்ணியமான தேர்தல்” நிகழ்ச்சியின்போது “கண்ணியமான தேர்தலும்-சமூகமும்” என்ற தலைப்பில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக 10நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது... எப்போதோ வாட்ஸ் அப்பில் படித்த கதை ஒன்று பேச்சின்போது உதவியாக இருந்தது..
“கணவன் - மனைவி-2 குழந்தைகள் உள்ள வீடு அது. வீட்டிற்கு தபால் ஒன்று வருகிறது. அன்று ரிலீசான புதுப்படத்திற்கு 4 டிக்கெட் உள்ளே.. இரவு செகண்ட் ஷோவிற்கு.. சரியாக 4 டிக்கெட் அனுப்பியது யார் என அவர்களுக்குத் தெரியவில்லை.. அனைவருக்கும் ஆச்சரியம். யார் அனுப்பியிருந்தால் என்ன, நல்லபடம், முதல் நாள், டிக்கெட் இலவசம்.. என மகிழ்ச்சியோடு குடும்பத்தினர் படத்திற்கு சென்றனர்.. படம் முடிந்து நள்ளிரவில் வீடுதிரும்பியபோது அதிர்ச்சி..பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் ஒருபொருளும் இல்லை. அனைத்து பொருட்களும் களவாடப்பட்டிருந்தது. ஒரு துண்டுத்தாள் ஹால் நடுவே கிடந்தது. எடுத்துப் படித்தார்கள்..
“...பூட்டை ஈசியாக உடைக்க முடிந்தது.. பீரோ மட்டும் உடைப்பதற்கு சிரமமாக இருந்தது. நாங்கள் அனுப்பிய டிக்கெட்டை பயன்படுத்தி உதவியமைக்கு நன்றி..”
களவாடப்பட்ட குடும்பம் வேறு யாருமல்ல. ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகம்தான். அக்குடும்பத்திற்கு கிடைத்த டிக்கெட்டுகள் போல, சில ஆயிரம் ரூபாய்களுக்கும், பரிசுப்பொருட்களுக்கும் ஆசைப்பட்ட நம் ஓட்டை விற்கிறோம்.. டிக்கெட் அனுப்பியர்வர்கள் வீட்டை களவாடியதுபோல், இலவசங்கள் கொடுத்தவர்கள் நாட்டைக் களவாடுகிறார்கள்..பொதுச்சொத்தை சூறையாடுகிறார்கள்..
இலவசமாய் ஒரு பொருள் கிடைக்கிறது என்றால் நம்மை யாரோ ஏமாற்ற நினைக்கிறார்கள் என்று சமுதாயம் உணரும்போது “கண்ணியமான தேர்தல்” சாத்தியமாகும்.
சகாயம்.ஐ.ஏ.எஸ், தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தேவசகாயம்.ஐ.ஏ.எஸ்(ஓய்வு), முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி ஆகிய தமிழகத்தின் முக்கிய நபர்கள் பேசிய மேடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்திற்கும் வாய்ப்பு கிடைத்தது என்றால் அது இயக்கத்தின் சமூகப் பணிகளுக்குக் கிடைத்த சிறு அங்கீகாரமாகவே கருதுகிறோம்..
வாய்ப்பளித்த “கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பின்” ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி..

No comments:

Post a Comment