01-01-2016:
முகநூலில் புத்தாண்டின் முதல் பதிவாக எதை எழுதலாம் என்று யோசித்து முடிக்கும் முன்பே சட்டவிரோத பேனரை அகற்றி சிறை சென்ற அறப்போர் இயக்கத்தின் மூன்று தோழர்களின்(ஜெயராம்,சந்திரமோகன், அத்தர்) வீரத்தை, தியாகத்தை எழுதுவதை விட வேறு என்ன இருக்க முடியும் என முடிவுக்கு வந்துவிட முடிந்தது..
சராசரி மனிதர்கள்
புத்தாண்டை எப்படிக்
கொண்டாடுவது
என்று சிந்தித்தார்கள்..
புத்தாண்டை எப்படிக்
கொண்டாடுவது
என்று சிந்தித்தார்கள்..
இந்த சமூகப் போராளிகள்
புத்தாண்டை சிறையில்
சந்தித்தார்கள்..
புத்தாண்டை சிறையில்
சந்தித்தார்கள்..
இரவு சைதாப்பேட்டை மருத்துவமனையில் மூவருக்கும் மருத்துவ சோதனை முடிந்து புழல் சிறைக்கு கிளம்பியபோது அத்தர் எங்களிடம் கூறிய வார்த்தைகள் “....இது ஒரு புதிய தொடக்கம்”..
ஆம், சட்டத்தின் ஆட்சியை அரசு அமல்படுத்தவில்லை என்றால், எல்லையற்ற அராஜகத்தை அரசு வேடிக்கை பார்க்கும் என்றால்,
ஆட்சியில் உள்ள கட்சி தமிழகத்தை குத்தகைக்கு எடுத்தவர் போல் சண்டித்தனம் செய்தால்....
ஆட்சியில் உள்ள கட்சி தமிழகத்தை குத்தகைக்கு எடுத்தவர் போல் சண்டித்தனம் செய்தால்....
பொதுநலன் கருதி, மக்களே களமிறங்கி அராஜகத்திற்கு முடிவுகட்டுவார்கள் என்பதை கண் முன்னே செய்து காட்டிய அத்தர் சொன்ன வார்த்தை ஆழமானது...
டிராபிக் ராமசாமி என்ற மூத்த போராளி தனிமனிதனாக செய்துவந்ததை அறப்போர் இயக்கத்தின் “இளைய போராளிகள்” செய்திருப்பது... “ஒரு புதிய தொடக்கம்”...
இது தொடரவேண்டுமா இல்லையா என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்யட்டும்..


No comments:
Post a Comment