Friday, 1 January 2016

நண்(ம்)பர் 4000.. வருக..

1-1-2016:
நண்பர் 4000..
அறப்போர் போராளிகளைப் பற்றிய இன்றைய பதிவு 2150 பகிர்வுகளைத்(Shares) தாண்டியது... என்பது இளைய(இணைய) சமுதாயம் ஆளுங்கட்சி நடத்தும் அட்டூழியங்களின் மீது எவ்வளவு கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
பணபலம் ஏதுமில்லா எங்களைப் போன்ற எளிய சமூகப் பணியாளர்களுக்கு,மக்கள் இயக்கங்களுக்கு முகநூல் என்பது யானை பலம். கருத்தை, போராட்டத்தை பரப்புவதற்கு - வேண்டிய உதவியைப் பெறுவதற்கு இந்த முகநூல் செய்துள்ள உதவி சொல்லிமாளாது. இதற்கு சமீபத்திய உதாரணம் அறப்போர் போராட்டம். அச்சு,காட்சி ஊடகங்களைவிட சமூக ஊடகங்கள் மூலம்தான் அறப்போர் செய்தி அதிகம் பரவியிருக்கும் என்று நம்புகிறேன்.
முகநூலில் இன்று இணைந்த 75 புதிய நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இணைந்து செயல்படுவோம்.. இந்த 75 நண்பர்களில் யாரோ ஒருவர் 4000மாவது நண்பராக இணைந்துள்ளார்.. புத்தாண்டு தினத்தன்று இணைந்த நண்(ம்)பர் 4000 அவருக்கு சிறப்பு வணக்கம்...வருக !!

No comments:

Post a Comment