கெளசல்யா - சக்தி - திருமண வாழ்த்து... பறையடி பெண்ணே பறையடி..!!
என்று கேள்வி கேட்டுப் பறையடி..!!
சங்கரைக் கொன்று
என்ன சாதித்தீர்கள்
என்று கேட்டுப் பறையடி..!!
என்று கேட்டுப் பறையடி..!!
தொப்புள்கொடி உறவைவிட
சாதிச்சங்கக் கொடி பெரிதா
என்று கேட்டுப் பறையடி..!!
பறையடி பெண்ணே பறையடி..!!
மூத்திரப்பை சுமந்து
மூலைமுடுக்கெல்லாம் சுற்றித்திரிந்து
சகமனிதனை
”மனிதனாய்” மதிக்காதோர் ”மாக்களே”
என்று பொட்டில் அறைந்துபேசிய
90 வயது தொண்டுக்கிழவன்
பெரியார் மண்ணில்
90 வயது தொண்டுக்கிழவன்
பெரியார் மண்ணில்
ஆணவக்கொலைகளை அனுமதியோம்
என்று பாடிப் பறையடி !!
பறையடி பெண்ணே பறையடி..!!
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்..!!
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்..!!
கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். !!
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். !!
என்று பாடிய
பாட்டன் பாரதியின்
வரிகளை ஏந்தி பறையடி..!!
பறையடி பெண்ணே பறையடி..!!
திருமணம் என்பது
இருமனம் கலப்பது !!
இதில் சாதியைக்
கலக்கும் சங்கதியை நிறுத்து
கலக்கும் சங்கதியை நிறுத்து
என்று எச்சரித்துப் பறையடி..!!
பறையடி பெண்ணே பறையடி..!!
குழந்தைத் திருமணம்
உடன்கட்டை
கட்டாயக் கல்யாணம்
அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதுக்கு
என்ற எங்கள் கால் சங்கிலிகள்
ஒவ்வொன்றாய்க் கழற்றி வீசி
வீரநடைபோட்டு வெளியே வந்துள்ளோம்..!!
ஆணவக்கொலைகளால்
அடுத்த சங்கிலிபோடவேண்டாம்
என்று உரக்கச் சொல்லிப் பறையடி..!!
பறையடி பெண்ணே பறையடி..!!
என் ”சக்தி” இருக்கும்வரை,
எனக்கு சக்தி இருக்குவரை
சாதிக்கெதிராய்
பறையடிப்பேன் என்று சொல்லியடி..!!
பறையடி பெண்ணே பறையடி..!!
-செந்தில் ஆறுமுகம்
09-12-2018
sentharu@gmail.com, 87545-80274

No comments:
Post a Comment