Tuesday, 11 December 2018

ராமர் கோவிலும், ராமர் பாதையும்

அவர்கள் “ராமர் கோவில்” கட்டினால், நாங்கள் “ராமர் பாதை” அமைப்போம்..!! 5 மாநில தேர்தலில்.. ஒரு மாநில தேர்தல் அறிக்கையிலிருந்து..

1. ”ராமர் பாதை” - ராமர் வனவாசம் சென்ற பாதையில் “ராமர் பாதை” அமைப்போம்
2. கோமியம்(கோமூத்ரா), பசுவரட்டி(கண்டா) தயாரிப்பு தொழிலாக நடத்தப்படும்
3. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பசு மடங்கள்(கோசாலைகள்) அமைப்போம்
4. பசுக்களுக்கு சாலையோரம் தற்காலிக தங்கும் கூடங்கள் அமைப்போம். சாலையில் அடிபடும் பசுக்களுக்கு மருத்துவம் பார்க்கப்படும், அடிபட்டு இறக்கும் பசுக்கள் நல்லடக்கம் செய்யப்படும்
5. பசுக்கள் புல்மேய நிலம் ஒதுக்கப்படும்
6. ஆன்மீகத்தை வளர்க்க “அத்யமிக் விபாக்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்
7. சமஸ்கிருதத்தை வளர்க்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்
ஏதோ ஒரு மாநிலத்தின், பா.ஜ.க.தேர்தல் அறிக்கை இது என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.
இல்லை..!! உங்கள் யூகம் தவறு..!! இது மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை..!!
நேற்று, மசூதி இடித்தோம்; நாளை ராமர் கோவில் கட்டுவோம் என்று மதவாத சக்திகள் ஒருபக்கம் கூட்டம் கூட்டி, மார்தட்டி இந்திய ஒருமைப்பாட்டிற்கு சவால்விட்டுவருகிறார்கள். “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நம் அடிப்படைக்கு வேட்டுவைக்கிறார்கள். பா.ஜ.க. வழக்கம்போல் “யெஸ் பாஸ்”, உத்தரவிடுங்கள் செய்துமுடிக்கிறோம், ”..கொஞ்சம் கால அவகாசம் மட்டும் கொடுங்கள்,பிளீஸ்” என்று சவால்விடுவோர் முன்பு மண்டியிட்டு,கெஞ்சி நிற்கிறது..!!
இந்துக்களின் ஓட்டை பா.ஜ.கவிடமிருந்து பறிக்க “ராமர் பாதை” கட்டுவோம் என்ற பாணியில் காங்கிரஸ் செல்வது சரியில்லை.? 
ஒவ்வொரு ஓட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஓட்டு என்ற போட்டிமிக்க ஓட்டு அரசியலில் இது தவிர்க்க முடியாததாகிவிட்டதா..?

No comments:

Post a Comment