செந்தில் ஆறுமுகம்(43), MCA :
n தமிழகத்தில் “நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி” மலரவேண்டும்
என்ற இலட்சியத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக உழைத்துவருபவர்.
n சமூக ஆர்வலர், எழுத்தாளர்,பேச்சாளர்,
களப்போரா
n தகவல்தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்த செந்தில் ஆறுமுகம் அவர்கள் தனது இலட்சியத்திற்காக 2005ல் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர சமூக ஆர்வலராக மக்கள் பணியாற்றத் துவங்கினார்.
n ”வீட்டுக்கு ஒருவர்; வீட்டுக்கு ஒருவர்” என்று தனது மனைவியும் இவரும் எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் சமூக,அரசியல் மாற்றத்திற்காக பங்களித்து வருகின்றனர்.
n மக்கள் சக்தி இயக்கம், மக்கள் சக்தி கட்சி, லோக்சத்தா கட்சி என்று பல்வேறு அமைப்புகளின் மூலம் அரசியல் மாற்றத்திற்காக உழைத்தவர். 2013ல் சட்ட பஞ்சாயத்து இயக்கம் எனும் மக்கள் இயக்கத்தை நிறுவியவர்.
n சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் இலஞ்ச-ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள்,சட்ட விழிப்புணர்வு,உள்ளாட்சிகளை வலுப்படுத்துதல், மதுத்திணிப்புக்கு எதிராகக் குரல்கொடுத்தல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவர்.
n தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை,குடிநீர்,பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரக்கோருவது உள்ளிட்ட பல பொதுநல வழக்குகளைத் தொடுத்து உயர்நீதிமன்றத்தில் வாதிட்டவர்.
n சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள இவர், இயக்கத்தின் தொலைபேசி சேவை மையத்தின் வழியாக 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு வழிகாட்டப்படுவதற்கு பின்புலமாக இருந்தவர்.
n தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று மக்களின் குரலாக ஊடகங்களில் ஒலித்து வருபவர்
n சமூக,அரசியல் பிரச்னைகளுக்காக பத்திரிகைகள், முகநூலில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ள இவர் ”என்றும் வற்றாத காவிரி அரசியல்” , ”ஸ்டெர்லைட் மூடப்பட்டது ஏன்?” போன்ற புத்தங்கங்களையும் எழுதியுள்ளார்.
n பள்ளி,கல்லூரிகளில் பல்வேறு சமூக விழிப்புணர்வு வகுப்புகள், சட்டப் பயிற்சிகள் கொடுத்துள்ளார்
n அரசியலை வருமானத்திற்கான வழியாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான வழியாகப் பார்க்கும் நேர்மறை சிந்தனை கொண்டவர்
n வளர்ச்சி அரசியல்-நேர்மை அரசியலை முன்வைத்து தொடர்ந்து களப்பணியாற்றினால் தேர்தல் அரசியலில் மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற அசராத நம்பிக்கை கொண்டவர்.!!




No comments:
Post a Comment